இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.
விவாகரத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி மும்பையில் சென்று செட்டில் ஆகி இருக்கிறார் அங்கு பாலிவுட் திரைப்படங்களில் நடித்த அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார் .
அப்போது தன்னுடன் நடித்த நடிகைகளான ஜெனிலியா மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜெனிலியா உடன் திருப்பி நடிப்பது என்பது ரொம்ப சந்தோஷம்தான். அவங்களோட திருப்பி நடிக்கிறதை விட என்ன சந்தோஷம் இருந்திட முடியும்? நாங்க ரெண்டு பேருமே இன்னும் டச்ல தான் இருக்கிறோம்.
அவங்களும் நானும் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறோம். அதாவது, துருதுருன்னு கேரக்டர்ல தான் நாங்க இன்னும் அப்படியே இருக்கோம்.. சின்ன வயசுல எப்படி ரவுடித்தனம் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தோமோ அதே மாதிரியே தான் நானும் ஜெனிலியாவும் இப்பவும் இருக்கிறோம். அதேபோல ஸ்ரேயாவும் என் கூட டச்ல இருக்காங்க இவங்க.
இதையும் படியுங்கள்: அய்யயோ…. மீண்டும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா: கைவிட்ட குடும்பம் -ரசிகர்கள் அனுதாபம்!
நாங்க எல்லாம் ரொம்ப நல்ல பிரண்ட்ஸா இருக்கிறோம். இப்ப வரைக்கும் கூட அவங்களோட சேர்ந்து திரும்பவும் படங்கள் நடிக்கணும் அப்படிங்கறது ரொம்ப நல்ல விஷயம் தான். எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். அவங்களுக்கும் நடிக்க விருப்பமிருந்து அதற்கு வில்லிங்கா இருந்தாங்கன்னா கண்டிப்பா இது நடக்கும். இந்த இன்டர்வியூ பார்த்துட்டு யாராவது கதை எழுதி என்னை கூப்பிட்டால் கூட நான் நிச்சயம் நடிப்பேன் என நடிகை ஜெனிலியா குறித்தும் அவருடன் நடிப்பது குறித்தும் ஜெயம் ரவி பேசினார். இவர்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.