விஜயகாந்த் இல்லனா… இன்னிக்கு தனுஷ் குடும்பமே நடுத்தெருவில் இருந்திருக்கும் : உண்மையை உடைத்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 2:14 pm

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் உள்ளனர். எந்த உச்சத்துக்கு சென்றாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் எத்தனை உச்சத்துக்கு சென்றாலும், தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய சினிமாவே பாராட்டும் ஒரு தமிழ் நடிகர் என்றால் அது புரட்சி கலைஞர் விஜயகாந்த் தான்… தன்னால் முடிந்த அளவு பணத்தை அள்ளி கொடுப்பவர். ஆனால் அந்த சமயம் அவர் செய்த உதவிகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படவில்லை.

தற்போது அவர் செய்த உதவிகள் வெளியே தெரிந்து வருகின்றது. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து ஒரு விழாவில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவே ஓபனாக பேசியுள்ளார்… தனது இரண்டாவது மகளுக்கு ஒரு மார்க் பத்தாமல் மருத்துவ சீட் கிடைக்காமல் அழுது கொண்டு புலம்பியுள்ளார்.

அப்போது வீட்டுக்கு வந்த விஜயகாந்த், மகள் அழுவதை பார்த்து என்னிடம் கேட்டார். உடனே நான் நடந்ததை சொன்னேன்… ஒரு மார்க் கிடைக்கலனு சொன்னதும், உடனே என் கூட வாங்க என, விஜயகாந்த் அவர் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார்.

உடனே ராமச்சந்திரா கல்லூரி உடையார் சாரை அழைத்து வீட்டில் பேசினார். இன்னிக்கு என் பொண்ணு அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு டாக்டராக இருக்க கேப்டன் தான் காரணம் என நெகிழ்ச்சியோடு கஸ்தூரி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…