ஏய்… யாருக்கு அறிவில்ல? ஜீவா சொன்ன அந்த வார்த்தை – கொந்தளித்த தாய்க்குலம்!

சினிமாவில் சமீப காலமாக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லைகளை சினிமா நடிகைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப பெண் கலைஞர்களுக்கும் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் சந்தித்து வருகிறார்கள்.

2017ல் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த திரைத்துறை துறையை உலுக்கியது. இதனால் கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டி என்ற குழு அமைத்து பாலியல் தொல்லை பிரச்சனைகளை விசாரிக்க ஏற்பாடுகள் செய்தனர். அதை எடுத்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதிலிருந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக தெரிவித்து பேரதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டுள்ள வரும் நேரத்தில் தற்போது நடிகர் ஜீவாவிடம் பத்திரிக்கையாளர் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் இத்தகைய பாதிப்புகள் இல்லை. பாலியல் தொல்லையே இல்லை என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் முன்னதாக இந்த கேள்விக்கு பதில் சொல்லவே மறுப்பு தெரிவித்து வந்த ஜீவாவை விடாப்பிடியாக பத்திரிகையாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இதுபோன்ற தொல்லை தமிழ் சினிமாவில் இல்லை எனக் கூறியதை அடுத்து அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே நடிகர் ஜீவாவுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட ஜீவா கடுமையான வார்த்தைகளால் பத்திரிகையாளரை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா? இதுபோன்ற கேள்வி எந்த இடத்தில் வந்து கேட்கணும் என்று விவஸ்தை இல்லையா?என கடுமையாக திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதையடுத்து தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என ஜீவா எப்படி கூற முடியும்? என பலரும் அவரை விமர்சித்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பல பெண் பிரபலங்கள் ஜீவாவை எதிர்த்து கேள்வி எழுப்ப வருகிறார்கள். தற்போது இச்சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தவகையில் பிரபல பாடகி சின்மயி ஜீவாவின் இந்த பதிலுக்கு கோபத்துடன் தனது twitter பக்கத்தில்… தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என்று அவர் எப்படி கூறுகிறார் என்று எனக்கு புரியவே இல்லை. என ஜீவாவை எதிர்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாலியல் ரீதியான தனது அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார் நடிகை சின்மயி .
இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Anitha

Recent Posts

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

32 minutes ago

கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…

35 minutes ago

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

2 hours ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

2 hours ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

3 hours ago

This website uses cookies.