இதுலயே பு*ங்கல.. அரசியல் எதுக்கு.. பிரதீப்பால் கமலின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?..(வீடியோ)
Author: Vignesh7 November 2023, 1:16 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, இன்று அவரது பிறந்த நாள் என்பதை கூட நெட்டிஷன்கள் நினைக்காமல் கமலஹாசனை கழுவி ஊற்றிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும் கமல்ஹாசனை கடுமையாக திட்டி வருகிறார்கள். நேரடியாக மக்களிடம் கேட்டபோது கூட பெண்கள் கமலை காரி துப்பியபடி திட்டி வரும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனால், கமலின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.