உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பிடித்த ஷாருக்கான் – குவியும் வாழ்த்துக்கள்!

Author: Shree
7 April 2023, 9:00 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.

அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,

உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான “TIME” பத்திரிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டின் கருத்து கணிப்பில் நடிகர் ஷாருக்கான். 1.2 மில்லியனுக்கும் அதிகமாக 4% அதிக வாக்குகளை பெற்று முன்னேறி உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஈரானிய பெண்களின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய ஹெலன் சிக்ஸஸ் என்ற பெண் இடம்பிடித்தார். மூன்றாவது இடத்தை சுகாதாரப் பணியாளர்கள் பெற்றனர். அதன் பின்னர் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் 4வது இடத்தை பிடித்தனர். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 5வது இடத்தை பிடித்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 677

    5

    4