இளையராஜா இசையில் யுவன் பாடிய ‘யார் இந்த பேய்கள்’ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் !!!

Author: Vignesh
10 February 2023, 8:00 pm

இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் !!!

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர்.

yaar-intha-peigal- updatenews360

இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

“யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும்.

வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரபலங்களை பாதித்தன் விளைவாகவே இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது. நம் நாட்டில் பாலியல் பேசுவது ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாக இருப்பதால், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

yaar-intha-peigal- updatenews360

இக்குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

சோனி மியூசிக் வெளியிட்ட இந்தப் பாடலின் நோக்கம் விழிப்புணர்வை மட்டும் பரப்புவது மட்டுமல்லாமல், மக்களை பயிற்றுவிப்பதும் ஆகும். ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

யார் இந்த பேய்கள்

இசை – இசைஞானி இளையராஜா
பாடியவர் – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
இயக்கம் – கிருத்திகா உதயநிதி

பாடல் வரிகள் – பா விஜய்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – சக்தி வெங்கராஜ்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?