எப்படி வலிச்சுருக்கும்? எனக்கு அதுதான் சந்தோஷம்.. யாஷிகா ஆனந்த் திடீர் பதிவு!

Author: Hariharasudhan
18 February 2025, 12:00 pm

தன் போட்டோவை பச்சை குத்திய இளைஞரின் செயலால் நடிகை யாஷிகா ஆனந்த் வேதனை அடைந்து முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகையாக வலம் வந்துகொண்டே, சமூக வலைத்தளங்களில் படுகிளாமரான போட்டோக்களால் ரசிகர்களை வசீகரித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிலையில், இவரது ரசிகர் ஒருவர், யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.

மேலும், அப்போது எடுத்த புகைப்படத்தை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், இதனைப் பார்த்த யாஷிகா ஆனந்த் கவலை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், “இப்படி பச்சை குத்தும்போதும் எவ்வளவு வலிச்சிருக்கும்? ஏன் இப்படி பண்றீங்க? உங்க அம்மாவ சந்தோஷப்படுத்துங்க. அதான் எனக்கும் சந்தோஷம்” எனத் தெரிவித்துள்ளார்.

Yashika anand worries fan's action

முன்னதாக, துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து, அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா மற்றும் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாவலர்.. ஜூட் விட்ட ஐ.பெரியசாமி.. திண்டுக்கல்லில் பதற்றம்!

மேலும், எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் X Ray கண்கள் என்ற படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில், மருத்துவர் ராம் பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், யாஷிகா ஆனந்த் மற்றும் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Yashika anand worries fans action

இதனிடையே, இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களீல் பதிவிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு மோகன வேலு ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். மேலும், விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?