அவரின் புண்ணியம் தான் அஜித்துடன் நெருக்கமா பழகினேன் – யாஷிகா!
Author: Shree23 November 2023, 9:05 am
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பின்புலம் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் தான் முன்னேறி நல்ல இடத்திற்கு வருவேன் என்பதை லட்சியமாக வைத்து அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் நடிகை ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் சொந்த மச்சான். ஆம், நடிகை ஷாலினியின் அண்ணன் தான் ரிச்சர்ட் ரிஷி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது இயக்கத்திலே ருத்ர தாண்டவம் என்ற ஜாதி வெறி மற்றும் தலித் விரோத உணர்வுகளைப் பரப்பிய படத்தில் நடித்ததால் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வந்த ரிச்சர்ட் ரிஷி தற்ப்போது நடிகை யாஷிகாவுடன் ஜோடி சேர்ந்து ” சில நொடிகளில்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போது அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கிசு கிசு செய்திக்கு ஆளாகினர்.
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கான புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படம் குறித்து பேசிய யாஷிகா ஆனந்த். இப்படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷியும் நானும் நல்ல நண்பர்களாகி விட்டோம். அவரின் புண்ணியத்தால் அஜித் சார் கூடவும் நெருக்கமாகிவிட்டேன் என மகிழ்ச்சியாக கூறினார்.