விபத்து வழக்கில் டிமிக்கி கொடுத்த யாஷிகா ஆனந்த்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.

இதனிடையே, நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.

இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் மார்ச் மாதம் 22ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை.

எனவே கடந்த மார்ச் 23ம் தேதி யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார். பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி அவர் ஆஜர் ஆகியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரானதையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

மேலும், செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரான நிலையில் நடிகை யாஷிகா மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு நீதிமன்றம் தளர்த்தியது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

6 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

7 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

8 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

8 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

8 hours ago

This website uses cookies.