பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.
மேலும் படிக்க: “திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்” – முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மணவாழ்க்கை..!
சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.
மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!
இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் கணவர் தன் பால் இனத்தவர். இந்த விஷயத்தை மருத்துவரை என்னிடம் சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் குடிபோதையில் ஒரே படுக்கையில் என்னென்ன பண்ணாங்க தெரியுமா என்று கேள்வி எழுப்பி பகீர் கிளப்பி உள்ளார்.
இதனால், அவரிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு வந்தேன். இந்த புகைப்படங்களை கூட என்னுடைய ட்விட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் தான் வெளியிட்டனர் என்று சுசித்ரா தெரிவித்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் ஒரு வீடியோவில் ஓரினச்சேர்க்கையாளர் பற்றி பேசி இருக்கிறார். அந்த வீடியோவில், நான் ஹோமோ செக்ஷுவலாக இருந்தால் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன் என்றும், அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. பெருமையாக தான் நினைப்பேன் என்று தெரிவித்துள்ளார். என் ஊரில் நடக்கும் பிரைவேட் வாக்கில் கலந்து கொள்வேன் நான் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் இது குறித்த வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
This website uses cookies.