மைக் OFF பண்ணிட்டு வெளிய வா உனக்கு இருக்கு.. மேடையில் சொடக்குப்போட்டு பேசிய யோகி பாபு..!(Video)

Author: Vignesh
29 July 2024, 11:42 am

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு தற்போது, ஒரு வருடத்திற்கு 15 படங்களுக்கு மேல் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில், சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, ஆறு மணிக்கு ஆரம்பிப்பதாக கூறி பத்திரிகையாளர்களுக்கு தகவல் கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கு யோகி பாபு வேறொரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பட குழுவினர் தெரிவித்த நிலையில் அதன் பின் யோகி பாபு பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு மேடையில் பேசினார். ஏன் வரவில்லை என்று விளக்கம் கொடுத்து பகிரங்கமாகவும் யோகி பாபு மன்னிப்பு கேட்டிருந்தார்.

அப்படி யோகி பாபு மன்னிப்பு கேட்டும் விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், யோகிபாவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்தது. விடாமல் கேள்விகளை கேட்டு யோகி பாபுவை கோபப்பட வைத்திருக்கிறார்கள்.

பின்னர், எனக்கு டைமிங் சொல்லவில்லை. என் சூழ்நிலையை சொல்லிவிட்டேன். எல்லா சிக்னலிலும் நின்று வருகிறேன். காரில் தானே வருகிறேன். அதுதான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டேனே அதன் பின் ஏன்? என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் சங்கம் தலைவராக நீங்கள் ஆவீர்கள் என்ற தகவல் வருகிறது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க மைக்கை ஆப் பண்ணிட்டு வெளிய வா என்று சொடக்கு போட்டு யோகி பாபு பேசியுள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 309

    0

    0