கட்டுப்பாட்டை இழந்த கார்..விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி.!
Author: Selvan16 February 2025, 12:18 pm
யோகி பாபு கார் விபத்து உண்மையா
எனக்கு எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை,ஊடகங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறு என யோகி பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: வாங்க ஏற்காடு போலாம்..அட்ஜஸ்மெண்டால் சினிமாவை விட்டு விலகிய நடிகை.!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது தமிழில் பல படங்களில் படு பிஸியாக நடித்து வருபவர் யோகி பாபு .

இவர் இன்று அதிகாலையில் தனது காரில் பெங்களூரு,சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தார்,அப்போது கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நடிகர் யோகி பாபுவிற்கு அதிர்ஷ்டவசமாக எந்த வித காயமும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்திகளை பரப்பி வந்தன.
இந்த தகவலை அறிந்தவுடன் பல திரைபிரபலங்கள்,நண்பர்கள் யோகி பாபுவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்,ஆனால் யோகி பாபு எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை,இது பொய்யான செய்தி என தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Im fine all. This is false news pic.twitter.com/EwO3MB3T2Q
— Yogi Babu (@iYogiBabu) February 16, 2025
மேலும் அவருடைய பக்கத்தில் இருந்து இதற்கான விளக்கமும் வெளியாகியுள்ளது.இதில் எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை,நான் நலமுடன் இருக்கிறேன்,நான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன்,அப்போது படப்பிடிப்பிற்கு வந்த இன்னொரு கார் தான் விபத்தில் சிக்கியது,ஆனால் செய்தி ஊடகங்களில் எனக்கும் என்னுடைய உதவியாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது,இது முற்றிலும் தவறான செய்தி என அவருடைய தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.