தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு பல படங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தி பிடித்துள்ளவர். பெரிய பட்ஜெட் மற்றும் சிறு பட்ஜெட் படங்களில் நடிகர் யோகி பாபு நடித்தால் போது என்று பலர் வரிசைக்கட்டி நின்று வருகிறார்கள்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய பங்காற்றினார் நடிகர் யோகி பாபு. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் பிஸியாகும் அளவிற்கு நடிகர் யோகி பாபு படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் முன்னணி நடிகர்கள் உச்சத்தில் இருப்பதால் சில விசயங்களை செய்து சர்ச்சையிலும் சிக்குவார்கள். அப்படி நடிகர் யோகி பாபுவும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
அதாவது, நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் சிலருடன் பிரச்சனை செய்து சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்ட் போடப்பட்டது. அதே பாணியில், நடிகர் யோகி பாபுவும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராமல் இழுத்தடித்து வருவதால் தயாரிப்பாளர் இவர் மீது கடும்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், யோகிபாபுவும் திருநெல்வேலியில் நடக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு, 9 மணிக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு 11.30 மணிக்கு வந்து ஒரு மணிநேரம் கழித்து பிரேக் என்று எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மொத்தமே 4 மணி நேரம் தான் அதிகபட்சமாக நடிப்பதால் தயாரிப்பாளர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். உச்சத்தை அடைந்து தலைக்கனத்தில் ஆடினால் ரெட் கார்ட் தான் கொடுப்பார்கள் என பலரும் யோகி பாபுவை விமர்சித்து வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.