சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆக பார்க்கப்பட்டது தான் ‘ஜெயிலர்’ .நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தை கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பாராத அளவுக்கு மாபெரும் வசூல் சாதனை ஈட்டி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.
இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து மோகன்லால், ஜாக்கி ஷெராப் , சிவக்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் , தமன்னா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரஜினிக்கும் சரி நெல்சன் திலீப் குமாருக்கும் சரி இரண்டு பேருக்குமே மிகப்பெரிய கம் பேக்காக அமைந்தது.
ஏனென்றால் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வியில் இருந்த சமயத்தில் தான் நெல்சன் திலீப் குமாரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி விமர்சனங்களை சந்தித்து வந்தார். அதன் பிறகு ஜெயிலர் திரைப்படம் இவர்கள் இருவரையும் கொண்டாட வைத்தது. தற்போது நெல்சன் திலீப் குமார் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கம் வேலைகளில் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகர் யோகி பாபு ரஜினியை கலாய்த்து காமெடி செய்யும்படியான காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதேபோல் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் யோகி பாபு…. “ஜெயிலர் 2 படத்தில் நெல்சன் புதுவிதமாக ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அது பெரிய அளவில் காமெடியாக இருக்கும்” என அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இருந்தாலும் யோகி பாபு ரகசியமான விஷயத்தை இப்படி போட்டு உடைத்துவிட்டாரே என தலைவர் பேன்ஸ் புலம்பியுள்ளனர்.