பிரபல தமிழ் சினிமா நடிகர் மீது பாசம் காட்டிய தல தோனி… ச்சே.. இப்படி ஒரு பரிசா? வைரல் வீடியோ..!

Author: Vignesh
31 May 2023, 5:15 pm

கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு படத்திற்கு சூட்டிங் செல்லும் அளவிற்கு பிஸியாம். தற்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் போல யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்காம்.

yogi babu - updatenews360

தமிழ் சினிமாவில் தற்போது யோகிபாபு, வடிவேலின் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். யோகி பாபு போறபோக்கில் அசால்டாக அடிக்கும் காமெடிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ஒரு சில படங்களில் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கு ஒரு படி மேலாக தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் யோகி பாபு.

இதனிடையே, நடிகர் யோகிபாபு படங்களை நடிப்பதை தாண்டி கிரிக்கெட் மற்றும் ஃபுட் பால் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இதனிடையே, ஷூட்டிங் சமயத்தில் கூட ஓய்வு கிடைத்தால் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவதை யோகிபாபு வழக்கமாக வைத்துள்ளார்.

இதுதவிர நண்பர்களுடன் சேர்ந்து யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆவது உண்டு. கிரிக்கெட்டில் சேவாக் மாதிரி அதிரடி ஆட்டக்காரராகவே விளையாடும் யோகிபாபு சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விடுவார். மேலும், யோகிபாபு கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வியந்து போன நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

yogi babu - updatenews360

இதனிடையே, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அந்த பேட் உடன் வீடியோ ஒன்றை எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த யோகிபாபு விஜய்க்கு நன்றி தெரிவித்து இருந்தார். தளபதி விஜய்யை தொடர்ந்து சமீபத்தில் தல-யும் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே