கடலில் விழுந்த யோகி பாபு; சுற்றி வளைத்த சுறா; ஷோக்கா நானும் நிக்கிறேன்;

Author: Sudha
15 July 2024, 4:21 pm

வடிவேலுவை கதாநாயகனாக மாற்றி இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சிம்புதேவன். இப்போது யோகி பாபுவை ஹீரோவாக வைத்து போட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்

இயக்குனர் சிம்புதேவன் கூறும்போது, 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதை இது“ஜப்பானியர்கள் நம் நாட்டின் மீது வெடிகுண்டு வீச ஆரம்பிக்கிறார்கள், ஒரு சிறிய படகில் 10 பேர் கடலுக்குள் தப்பிச் செல்கிறார்கள்.எதிர்பாராதவிதமாக படகு நடுக்கடலில் நிற்கிறது. படகில் ஒரு துளை விழுந்து படகு மெல்ல மூழ்கத் தொடங்குகிறது. இந்த பதற்றத்தை அருகிலிருக்கும் ஒரு சுறா இன்னும் அதிகரிக்கிறது.படகில் இருந்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதையின் மையக்கரு.

தூத்துக்குடிக்கு அருகிலுள்ள குலசேகரம் பட்டினத்தை ஷூட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தோம். ஆனால் நடுக்கடலில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாகவே இருந்தது. நாங்கள் ஏழு நாட்களுக்கு படப்பிடிப்பை கூட ரத்து செய்ய வேண்டியிருந்தது, ”என்று தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய உடன் மீனவர்களை அழைத்துச் சென்றோம். “உண்மையில், படப்பிடிப்பின் போது, யோகி பாபு கடலில் தவறி விழுந்தார், ஆனால் அவரது நீச்சல் திறமை எங்களை ஆச்சரியப்படுத்தியது. இது யதார்த்தமான காட்சிகளை படமாக்க என்னைத் தூண்டியது,” என்றும் தெரிவித்தார்.

போட் படத்தில் இடம் பெற்ற சோக்கா நானும் நிக்கிறேன் பாடல் இப்போது வெளியாகி உள்ளது.இந்த பாடலை சுதா ரகுநாதன் பாடியுள்ளார்

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 215

    0

    0