“நாசமா போயிடுவான்னு சொன்ன மனுஷன்” -தந்தையின் முதல் பாராட்டில் கலங்கிய யோகிபாபு!

Author:
1 August 2024, 1:19 pm

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகராக எந்த திரைப்படம் வெளியானாலும் அதில் யோகி பாபுவின் காமெடி காட்சி கட்டாயம் இடம் பெற்று வருகிறது. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ்,ரஜினிகாந்த் இப்படி பல முன்னணி ஸ்டார் நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

பருமனான தோற்றத்துடன், பார்ப்பதற்கே சகிக்காத முக ஜாடையுடன் மண்டை முழுக்க மறைக்கும் சுருளை முடி வைத்துக்கொண்டு பல்வேறு கேலி கிண்டல்களை ஆரம்பத்தில் சந்தித்து வந்த யோகி பாபு பின்னர் தனது காமெடி திறமையை ஒவ்வொரு படத்தின் மூலம் மெருகேற்றி காட்டியதன் மூலம் இன்று தவிர்க்க முடியாத காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்.

இன்று ஒரு படத்திற்கு ரூ. 40 முதல் ரூ.45 லட்சம் வரை சம்பளமாக வாங்கும் யோகி பாபு கார், பங்களா வீடு என சொகுசாக வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர் இந்த இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யோகி பாபு தனது தந்தை குறித்து பேசியதாவது, நான் சினிமாவில் நடிப்பது என்னுடைய அப்பாவுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை.

“இவர் உருப்படாத வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்கான். வாழ்க்கையில பிழைக்கிற மாதிரி ஏதாவது வேலையை செய்ய சொல்லு என அடிக்கடி என்னுடைய அம்மாவிடம் கூறிக்கொண்டே இருப்பார். அந்த சமயத்தில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சின்ன சின்ன படங்களில் எல்லாம் நடித்து மேல வந்துக்கொண்டிருந்த சமயம் அது..

அப்பவும் அவர் எதுவும் பெருசா எடுத்துக்கவே இல்ல. இந்த சினிமா வாழ்க்கை அவருக்கு பிடிக்கவே இல்லை டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்னு என்னை திட்டிக்கிட்டே இருப்பாரு. அதுக்கு அப்புறம் தான் “காக்கா முட்டை” படம் வந்துச்சு அந்த படத்தை தியேட்டர்ல பார்த்த என்னுடைய அப்பா எங்க அம்மா கிட்ட வந்து என்ன.. உன் பையன் பண்றத பார்த்து எல்லாருமே சிரிக்கிறாங்க. நல்லா பண்ணி இருக்கான்! இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு அப்படின்னு சொன்னாரு. அதை கேட்டதும் என்னோட கண்ணே கலங்கி போச்சு என யோகி பாபு கூறி இருக்கிறார். அவர் இந்த பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?