தைரியம் இருந்தா மஞ்சு வாரியர் கிட்ட போய் கேளுங்க.. கொந்தளித்த பிரபல நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2025, 8:52 am
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை பார்வதி. தேர்வு செய்து நல்ல கதையுல்ல படங்களில் மட்டும் கவனம் செலுத்து பூ பார்வதி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து பார்வதி, சினிமா பெணக்ள் நல அமைப்பு ஒன்றை தொடங்கி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த அமைப்பில் பல நடிகைகள் இணைந்து குரல் கொடுத்தனர். குறிப்பாக மஞ்சு வாரியர், விது வின்சென்ட், ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் போன்றவர்கள் இணைந்தனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பில் இருந்து சமீபத்தில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் விலகினர். இதனிடையே நடிகை பார்வதி செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது இரு நடிகைகள் விலகல் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, டென்ஷனான பார்வதி, தைரியம் இருந்தா மஞ்சு வாரியரிடம் இதை கேளுங்க. ஏன் உங்களால் அவரிடம் பேட்டி எடுக்க முடியாதா? சம்பந்தம் இல்லாத என்கிட்ட ஏன் கேட்கறீங்க.. எனக்கு இது மரியாதை குறைவாக உள்ளது என கொந்தளித்துள்ளார்.