இனிமேல் என்னை “விஜய்”னு பேர் சொல்லி கூப்பிடாதீங்க-மரியாதையா… புது கட்டளையிட்ட விஜய்!

Author: Shree
9 September 2023, 2:28 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிர்வாகிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் நடிகர் விஜய் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக வடிவமைக்க கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பேசிய புஸ்லி ஆனந்த், நிர்வாகிகள் இனிமேல் விஜய்யை ” விஜய்” என்று பேர் சொல்லி கூப்பிடவே கூடாது ” தளபதி ” என்று தான் கூப்பிடவேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகி புஸ்லி ஆனந்த் கூறியுள்ளார்.

இது பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் விஜய்க்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என மக்கள் பரவலான கருத்து கூறி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் விஜய் தன் நிர்வாகிகளை அடிமைகளாக வைத்திருக்க போகிறார் எனவும் விமர்சித்துள்ளனர். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 7153

    15

    17