ஐஸ்வர்யாவுக்கு செக் வைக்கும் தனுஷ்… லால் சலாம் படத்துக்கு முட்டுக்கட்டை? கோலிவுட்டில் பரபரப்பு!!

Author: Vignesh
4 April 2023, 11:30 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக இருவரும் கூறியிருந்தார்கள்.

Aishwarya Dhanush - Updatenews360

அதன்பின்னர் பல விதமான கருத்துக்கள் இவர்கள் இருவர் குறித்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே, தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

lal-salaam - updatenews360

இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் நிலையில், லால்சலாம் படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கும் ஒரு படத்திலும் விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்திற்கு கேட்ட கால்ஷீட் தேதியிலேயே நடிகர் தனுஷும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் கால்ஷீட் கேட்பதால் என்ன செய்வது என்று முழித்து வருகிறாராம் விஷ்ணுவிஷால். தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு இடையில் சிக்கிக்கொண்டேனே என்று புலம்பி வருகிறாராம் விஷ்ணு விஷால்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…