தவறான பாதையில் சென்று சீரழியும் இளம் நடிகர்கள்… எல்லாத்துக்கும் காரணம் அஜித் தானாம்!

Author: Shree
23 August 2023, 6:56 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் மிகவும் சிம்பிளாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமே இருப்பார். படங்களில் நடிப்பதோடு சரி அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வரமாட்டார். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்கமாட்டார்.

ஆனாலும், அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. என்னதான் அஜித் ரஜினி, விஜய்க்கெல்லாம் பெரும் பாடமாக அஜித் இருந்து வந்தாலும் இது சினிமா தொழிலில் சரியான முறையே இல்லை என்கிறார்கள் விநியோகிஸ்தர்கள்.

ஆம், மிகப்பெரிய நடிகர் அஜித். அவருக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என நம்பித்தான் தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி கூட மிகுந்த நம்பிக்கையில் அஜித்தை வைத்து படம் எடுக்கிறார்கள். ஆனால், அஜித்தோ போட்ட பணத்தை எடுக்க கூட வழி விடவே மாட்டேங்குறார்.

ஆம், அவர் பல வருடங்களாக எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துவிடுவதோடு அஜித்தை பார்த்து மற்ற நடிகர்களும் அவரை போலவே எந்த ப்ரோமோஷனுக்கும் வருவதில்லையாம். இதனால் சினிமா தொழில் பாதாள குழியில் தான் விழுகிறது. எனவே வளர்ந்து வரும் இளம் நடிகர்களை அஜித் சீரழித்துவிடுவதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!