15 ஆண்டுகளுக்கு பின் Re – ரிலீஸ் ஆன வாரணம் ஆயிரம்…. தியேட்டரிலே காதலிக்கு propose செய்த இளைஞன் – வைரல் வீடியோ!

Author: Shree
7 August 2023, 4:20 pm

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 14, 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்வையாக கொண்டும் மூன்று விதமான காதல் பயணங்களையும் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இதில் சூர்யா ராணுவ அதிகாரியாக கட்டுமஸ்தான தோற்றத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

அதே நேரத்தில் சமீரா ரெட்டி மீதான காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி பின்னர் அவரது மரணத்தால் பைத்தியமாக அலைவார். அதிலிருந்து மீண்டு தனது தங்கையின் தோழி திவ்யா ஸ்பந்தனாவின் ஒருதலை காதலை ஏற்று இழந்த காதலை மீண்டும் அனுபவிப்பார். பல கோணங்களில் கதை இருந்தாலும் மிகவும் தெளிவாக, அழகாக கோர்க்கப்பட்ட ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தது வாரணம் ஆயிரம் திரைப்படம். குறிப்பாக அன்றைய காதலர்களை கொண்டாட வைத்தது.

அதிலும் “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” பாடல் இன்று வரை பிரபலமான ஒரு பிரேக்கப் பாடல். இந்நிலையில் சுமார் 15 ஆண்டுகள் கழித்து இப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. பெங்களுருவில் உள்ள திரையரங்கில் வாரணம் ஆயிரம் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேரத்தில் காதலன் தன்னுடைய காதலிக்கு தியேட்டரிலே சர்ப்ரைஸாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட வைத்துள்ள வாரணம் ஆயிரம் படத்திற்கு ஒரு ஹிட் லைக்ஸ் போடுங்கள். இதோ அந்த வீடியோ:

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 333

    0

    0