நிச்சயமில்லாத வாழ்க்கை சார்… முடிஞ்ச வரை அன்பை பரப்புங்க : இளம் சினிமா விமர்சகர் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 10:39 am

பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேர்த்தியான விமர்சனம் மற்றும் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதில் கை தேர்ந்தவராக வலம் வந்த கௌஷிக் திடீரென மரணம் அடைந்திருப்பது இணையதள வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக ஆகஸ்ட் 15 மாலை மதியம் 3 மணி அளவில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இவரது இறப்பு செய்தி இவரை பின் தொடரும் ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வந்த கௌஷிக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவுக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தில் பிரியா விடை பெற்ற கௌஷிக் வெறும் 35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 574

    0

    0