நித்தியானந்தா மீது பிரபல நடிகைக்கு க்ரஷ்ஷாம்..! திருமணம் செய்ய போவதாக வீடியோ வெளியிட்டதால் ஷாக்காகும் ரசிகர்கள்..!
Author: Vignesh21 December 2022, 12:00 pm
வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.
மேலும், தனக்கு கிடைக்கும் படத்தை சரியாக பயன்படுத்தி நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சுமோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில், சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்தி பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பிரபல சாமியார் நித்தியானந்தாவை திருமணம் செய்ய எனக்கு ஆசை என்று தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே, பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதனை கேட்டு முதலில் பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள், இதனிடையே, தனக்கு நித்தியானந்தாவை ரொம்ப பிடிக்கும் என்றும், நித்தியானந்தாவை திருமணம் செய்தால் தன்னுடைய பெயரின் பின்னால் இருக்கும் ஆனந்தி மாற்ற தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் அவருக்கு எல்லோரையும் எளிதாக இருக்க முடியும் என்றும்,
இத்தனை பேர் அவரை பின் தொடர்கின்றார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது என்று நடிகை பிரியா ஆனந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.