சமூக வலைதள பக்கங்களில் பிரபலம் ஆகிவிட்டால் தன்னைப் பெரிய செலிப்ரிட்டி என தாமாகவே நினைத்துக் கொண்டு அதை பயன்படுத்தி செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்து ஏழரையில் மாட்டி வரும் பிரபலங்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் youtubeர் பிரசாந்த். தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை தொடர்ந்து விமர்சித்து YouTubeகளில் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் இந்த பிரசாந்த் ரங்கசாமி. இவரை யூடியூப்பில் ஃபாலோவ் செய்பவர்கள் கூட்டம் மிக அதிகம் என்றே கூறலாம். இந்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு தான் பெண்களிடம் அத்துமீறி தகாத காரியத்தில் ஈடுபட்டு அந்தரங்க லீலைகளை செய்து வந்திருக்கிறார்.
தற்போது இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆம். பல்வேறு திரைப்பட நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை பிரசாந்த் தன்னுடைய இச்சை ஆசைக்கு இணங்க கூப்பிட்டு இருக்கிறார். அதன் குறுஞ்செய்திகள் தற்போது ஸ்கிரீன்ஷாட் ஆக பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் வெளியிட்டு பேரதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்கள்.
அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் பிரிய ஆனந்த் வெளியிட்டல்ல கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸ் எல்லாம் பாவம் என கமெண்ட் அடித்திருக்கிறார் பிரசாந்த். இதை பார்த்து கடுப்பான பிரியா ஆனந்த் பாண்டான கூறி பதிலடி கொடுத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல். பல பெண்களிடம் காதல் , ஆபாசம், படுக்கை , முத்தம் போன்றவற்றை குறித்து அத்துமீறி பேசி முகம் சுளிக்க வைத்தார். அதன் ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து நெட்டிசன்கள் இணையத்தில் ஷேர் செய்து #SaveGirlsFromPrashanth என ஹாஷ்டேக் போட்டு வைரலாக்கி உள்ளனர்.
இது போன்று பல பெண்களிடம் பிரசாந்த் அத்துமீறி தன்னுடைய ஆபாச இச்சைக்கு அழைத்ததால் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் ரொமான்டிக் ரோமியோ பிரசாந்த் என மீம்ஸ் போட்டு அவரின் முகத்திரை கிழித்து வருகிறார்கள். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.