ட்ரெண்டிங்கில் நம்பர் 1, நம்பர் 2 : YouTube-ஐ அடித்து நொறுக்கிய துணிவு..! அப்செட்டில் விஜய் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
19 December 2022, 11:00 am

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ajith and vijay - updatenews360

இந்நிலையில், துணிவு படத்தில் இருந்து ஏற்கனவே ‘சில்லா சில்லா’ என முதல் பாடல் வெளிவந்தது. அதை தொடர்ந்து நேற்று துணிவு படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ எனும் பாடல் வெளிவந்தது.

இரண்டு பாடலும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள நிலையில், Youtube ட்ரெண்டிங்கில் இரண்டு பாடல்களும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ..

thunivu -updatenews360
  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்