உண்மையை மறைச்சிட்டாங்க?.. ஸ்ரீதேவி மரணம் குறித்து பேசிய YouTuber மீது நடவடிக்கை..!
Author: Vignesh5 February 2024, 7:08 pm
நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் விசாரணையில், அவர் இறந்தது விபத்து தான் என தெரிய வந்தது. இந்நிலையில், புவனேஸ்வரரை சேர்ந்த தீப்தி என்ற youtuber ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளை இந்திய அரசும், துபாய் அரசும் மூடி மறைப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கு ஆதாரமாக அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகம் ஆகியவற்றிலிருந்து வந்த கடிதங்களை காட்டி இருந்தார்.
அரசு கேட்டுக் கொண்டதால், இது பற்றி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில், youtuber காட்டி ஆவணங்கள் போலி என தெரிய வந்திருக்கிறது. இது பற்றி தீப்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தீப்தி விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.