ஜப்பானில் நடக்கும் தனுஷ் திருமணம் அப்டேட் சொன்ன யூ ட்யூபர்; கிஃப்ட் செம்ம..

Author: Sudha
15 July 2024, 4:50 pm

தமிழ்த் திரை உலகில் சிறந்த வில்லனாகவும், ஹீரோவாகவும் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த நடிகர் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளார்.சமீபத்தில் கூட பயில்வான் நெப்போலியன் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசியிருந்தார்.கிசு கிசுக்களில் அதிகம் சிக்காத நடிகர் என சொல்லியிருந்தார்.

நெப்போலியன் மகன் தனுஷுக்கு

கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகள் அக்‌ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வரமுடியாததால் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நெப்போலியன் பத்திரிக்கை வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் யூடியூப் இர்பான் வீட்டுக்கு சென்ற நெப்போலியன் தன் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதில், நெப்போலியன் மகனின் திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மன்னர் காலத்து ஓலைச்சுவடி போல இருந்த பத்திரிக்கை தங்க நிறத்தால் ஜொலித்தது. மேலும் இத்துடன் வெள்ளிக் கிண்ணம் ஒன்றும், முத்திரி, பாதம், பிஸ்தா அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாகக் கொடுத்துள்ளனர்.

நெப்போலியன் மகன் திருமணம் எங்கு நடக்கப்போகிறது என்று பலவிதமான வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது ஜப்பானில் திருமணம் நடப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 198

    0

    0