நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு என சில தினங்களுக்கு முன்பு வெளியானது. யுவன் இசையில் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. விஜய் ரசிகர்களே பாடலை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் முந்தைய பாடல்களை ஒப்பிட்டு விசில் போடு பாடலை நெட்டிசன் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த பாடலை எழுதிய மதன் கார்க்கி அளித்த பேட்டியில், விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதாவது, செல்பி ஃபுல்ல, கூகுள் கூகுள் பாடலுக்கு கூட இப்படித்தான் ஆரம்பத்தில் கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்றும், தற்போது மக்கள் பாடலை ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல இந்த பாடலுக்கும் நடக்கிறது என அவர் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!
முன்னதாக, சமீபத்தில் தான் Goat படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், விஜயின் குரலில் வெளிவந்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து உள்ளனர். விசில் போடு பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்த நிலையில் தான் யுவன் சங்கர் ராஜா instagram பக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக பேசிய யுவன் தொழில்நுட்ப கோளாறால் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் சரியாக வேலை செய்யவில்லை. எங்களுடைய குழு மீட்பு பணியில் இறங்கியுள்ளனர் என்று யுவன் சங்கர் ராஜா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!
இந்நிலையில், யுவன் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் வாழ்க்கையில் எல்லாமே அடங்கி இருக்கும். நீங்கள் நண்பர்களை இழப்பீர்கள். ரசிகர்களை இழப்பீர்கள், குடும்பத்தை இழப்பீர்கள் வாழ்க்கை என்பது வட்டம். ஆனால், உங்கள் இதயம் நிலையாக இருக்க வேண்டும். அதை எல்லாம் கையாள வேண்டும். ஒரு சமயத்தில் நாம் பீக்கில் இருப்போம், அதன்பின்னர் கீழே இருப்போம். இதுதான் வாழ்க்கை என்று யுவன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.