ஆள விடுங்க.. இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. பிரபல நடிகரின் படத்தால் டென்ஷனான யுவன்..!

Author: Vignesh
4 March 2024, 6:36 pm

சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வருகிறார் ஆனால் ஜொலிக்க முடியாமல் காணமல் போய்விடுவார்கள். ஆனால் இன்றளவும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் வாரிசாக சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் இமைசயமைப்பாளராக அறிமுகமானார்.

yuvan shankar raja

பின்னர் ஒரு சில படங்களில் பணியாற்றி வந்தார். பின்னர் துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனது வெற்றிப்படிகளை ஆரம்பித்த அவர், இன்றளவும் இளசுகளின் மனதுகளை இசையால் வென்று வருகிறார்.

இந்நிலையில், ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில், நடைபெற்ற காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆருத்ரா கோல்டு மோசடி குறித்தும் தான் யாரையும் ஏமாற்றவில்லை எனவும் ஆர் கே சுரேஷ் பேசி இருந்தார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட தென் மாவட்டம் படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த யுவன் சங்கர் ராஜா பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை கிளியர் பண்ண விரும்புகிறேன். நான் தென் மாவட்டம் படத்தில் பணியாற்றவில்லை, யாரும் இதுவரை பணியாற்ற என்னை அணுகவும் இல்லை என அதிரடியாக எகஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Rk suresh

இந்த பதிவு வைரலான நிலையில், இதனை பார்த்து பதறி அடித்த ஆர்கே சுரேஷ் யுவன் சார் நீங்கள் இந்த திரைப்படம் மற்றும் லைவ் concert -க்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் ஒப்பந்தத்தை தயவு செய்து சரி பார்க்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 243

    0

    0