பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் “சர்தார் 2” திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திடீரென விலகியுள்ளார்.இதனால்,அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் தற்போது இப்படத்தின் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படியுங்க: கண்ணாடி உடைப்பு..ரசிகர்கள் அட்டகாசம்..டென்ஷனில் கத்திய விக்ரம்.!
2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான “சர்தார்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.படம் 100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்ததோடு,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து “சர்தார் 2” படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதில் ரெஜிஷா விஜயன் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் ஆரம்பிக்கும்போது,இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியிருந்தார்.ஆனால், தற்போது அவர் இப்படத்தில் இருந்து விலகியதால், “கைதி” “விக்ரம் வேதா” உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார்.
அண்மையில் “எனக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை” என்று ஒரு பேட்டியில் சாம் சி எஸ் கூறிய நிலையில்,தற்போது சர்தார் 2-வில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.