சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வருகிறார் ஆனால் ஜொலிக்க முடியாமல் காணமல் போய்விடுவார்கள்.
ஆனால் இன்றளவும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் வாரிசாக சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் இமைசயமைப்பாளராக அறிமுகமானார்.
பின்னர் ஒரு சில படங்களில் பணியாற்றி வந்தார். பின்னர் துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனது வெற்றிப்படிகளை ஆரம்பித்த அவர், இன்றளவும் இளசுகளின் மனதுகளை இசையால் வென்று வருகிறார்.
இப்படியிருக்கையில் இயக்குநர் ஜே.சுரேஷ் என்பவர் அளித்த ஒரு பேட்டியில், யுவன் வாய்ப்பில்லாமல் முடங்கி கிடந்தார். அப்போது நான் ஜூனியர் சீனியர் என்ற திரைப்படத்தை இயக்கினேன்.
பின்னர் யுவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தேன். அப்போது அவரது சம்பளம் வெறும் 75 ரூபாய்தான் என கூறினார். மேலும் அரவிந்தன் படம் தோல்வியை தழுவியதாகவும், ஜூனியர் சீனியர் படத்தால்தான் யுவனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது என கூறியுள்ளார்.
இந்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், யுவனின் ரசிகர்கள் கடும் கோபமடைந்து இயக்குநர் சுரேஷை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜுனியர் சீனியர் படத்தை விட அரவிந்தன் படத்தில் பாடல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.