வயசையும் Dress-ஐயும் வெச்சு Judge பண்ணாதீங்க.. அப்செட் ஆன யுவினா..!
Author: Vignesh26 February 2024, 1:01 pm
சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி அதன் பின் இளம் நடிகைகளுக்கு இணையாக மாறிவரும் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது, அதிகரித்து வருகின்றனர். முன்னதாக அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாகாவை தொடர்ந்து பிரபலமாகி வருபவர் தான் குட்டி பெண் யுவினா பர்தாவி. இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியான மிகப்பெரும் வெற்றி அடைந்த வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த படத்தில், கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இவர் தமன்னா அஜித்துடன் இணைந்து கியூட்டாக நடித்திருப்பார். இந்த படத்தினை தொடர்ந்து மேகா, கத்தி, அரண்மனை, காக்கி சட்டை, ஸ்ட்ராபெர்ரி, மம்மி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மேலும், அவரது அம்மாவுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். குட்டி குழந்தையாக இருந்த யுவினா தற்போது வயது பெண்ணாக மாறி மாடன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யுவினாவிடம் உங்களை அதிகமாக கோபப்படுத்தும் பூமர் கொஸ்டின் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், திடீர்னு வளந்துட்டாங்க, ஏன் இந்த வயசுலயே இப்படி எல்லாம் டிரஸ் பண்ணனும், நான் அவ்வளவு எல்லாம் எதுமே அநாகரிகமான டிரஸ் பண்ணதே கிடையாது. ஆனால், இந்த மாதிரி கேள்விகள் கேட்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும் என யுவினா தெரிவித்துள்ளார்.