மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!
Author: Selvan24 February 2025, 2:28 pm
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை
சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த சில வருடமாக விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை பாத்து வந்தார்.
இதையும் படியுங்க: வாழ்க்கை ஒரு வட்டம்…திடீரென ஆமீர் கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்.!
அந்த வகையில் கடந்த வருடம் குக் வித் கோமாளி சீசன்-5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.அதே சேனலில் நீண்ட காலமாக தொகுப்பாளராக இருக்கும் ப்ரியங்காவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்,அவர் வெளியே வந்த பிறகு பிரியங்காவை பற்றியும்,விஜய் டிவியில் நடக்கும் குளறுபடிகளை பற்றியும் வெளிப்படையாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழ் சேனலில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வந்தது,தற்போது ஜீ தமிழ் சேனல் தரப்பில் இருந்து மணிமேகலைக்கு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து அதில் “என்னுடைய வாழ்க்கையில் அடுத்தகட்டடத்திற்கு செல்கிறேன்,மக்கள் வழக்கம் போல உங்களுடைய ஆதரவை எனக்கு கொடுக்க வேண்டும் ,கடினமா உழைக்க வேண்டும்…கடவுளை நம்ப வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்,அவருடைய பதிவிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் விஜய் டிவி பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் நேற்று விராட் கோலி சதம் அடித்ததை பகிர்ந்து “கெட்ட பையன் இந்த ஸ்டாருடா..உன்ன மிஞ்ச யாருடா” என்ற பாட்டை வைத்து பதிவு போட்டுள்ளார்,இந்த பதிவு மணிமேகலையை மறைமுகமாக தாக்கி தான் போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.