மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2025, 8:32 am
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த அவர், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பணத்தை இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
அந்த வீடியோவில், எனக்கு தெரிந்த நபர் அவசரமாக ₹15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் கேட்டிருந்தார். நான் அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிட்டேன்.
ஆனால் அதில் பெயரை பார்த்த பின் வேறொருவர் பெயர் இருந்தது. உடனே போன் செய்து கேட்ட போது, எனது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு விட்டது என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், சைபர் கிரைமில் சிக்கியதை உணர்ந்தேன், இது குறிதது சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளேன் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.