ஏய் சல்மான் கான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா…? பெண் ரிப்போர்ட்டருக்கு கூல் பதில்!

Author: Shree
27 May 2023, 1:12 pm

இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார். அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது.

இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 57 வயதாகும் சல்மான் கான் இன்னுமும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்கள்.

இதையடுத்து அவர் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சல்மான் கானிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ” ‘ஏய் சல்மான் கான் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என கேட்டார். அதற்கு அவர், ‘என் திருமண வயது காலம் முடிஞ்சுருச்சு. நீங்க இதை 20 வருஷம் முன்னாடி கேட்ருக்கனும்’ என செம கூலாக ரிப்ளை கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பாவம் சல்மானின் நிலைமை இப்படி ஆகிப்போச்சே என எல்லோரும் வருத்தமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி