கனகாவின் இந்த நிலைமைக்கு காரணமே அதுதான்.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்..!

Author: Vignesh
30 January 2024, 2:15 pm

80 காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார். இவர், தமிழில் முன்னாடி நடிகர்களுடன் நடித்து அசத்திருந்தார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா. தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கி கொடுத்தது.

kanaka-updatenews360

திடீரென இவரது தாயார் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் கனகா தவித்து வந்தார். தந்தையுடன் சொத்து பிரச்சனையால் தகராறு செய்தும் வந்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து வந்த கனகா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

kanaka-updatenews360

இந்நிலையில், பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருந்த கனகா எப்போது வெளியே வருகின்றார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் பலர் இருந்தனர். சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி அவரது வீட்டருகே காத்திருந்து ஒருநாள் கனகாவை பார்த்ததுடன் அவருடன் புகைப்படமும் எடுத்து வெளியிட்டார்.

kanaga

இப்படி ஒரு நிலையில் சரத்குமார் கனகா குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி சினிமா மீது அவர் அதிக காதலைக் கொண்டு இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்கள் மனதில் ஒரு அழியாத ஏற்படுத்திவிட்டது. கனகாவுக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவருக்கு சில உணர்ச்சிப் பிரச்சனைகள். அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன் என்று சரத்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

sarathkumar

மேலும், சினிமாவில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 473

    0

    0