துருக்கி,ஜெர்மன் மொழி பேசிய தமிழ்ப் பேய்; இதன் பூர்வீகம் கேரள தேசம் !!..

Author: Sudha
5 July 2024, 12:36 pm

இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம் மணிச்சித்ரதாழ். மலையாளத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு
பி வாசுவின் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்தது.

ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர்.

இந்தப் படம் கன்னடப் படமான அபாமித்ராவின் மறு ஆக்கம்.

அபாமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் மறு ஆக்கம்காக இருந்தது.

சந்திரமுகி திரைப்படம் 1999-ல் வெளியான படையப்பா வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

போஜ்புரியில் சந்திரமுகி கெ ஹுன்கார் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஜெர்மன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இது ஜெர்மனியில் Der Geisterjäger என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.அது மட்டுமல்லாமல் துருக்கியிலும் மற்றும் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!