நடிகரான அட்லி; இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்; வியப்பில் ரசிகர்கள்

Author: Sudha
5 July 2024, 11:52 am

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த “ராஜா ராணி”திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய்யை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கினார்.இதில் விஜயின் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தெறி”

இந்த படம் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இயக்குனர் அட்லியே தயாரிக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேபி ஜான் படத்தின் புதிய அப்டேட்ஸ் ஒன்று கிடைத்துள்ளது.சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் நடித்திருப்பதாக ஒரு தகவலை திரை வட்டாரம் சொல்கிறது.

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதால் நட்பு அடிப்படையில் இந்த பேபி ஜான் படத்தில் அவர் நடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 155

    0

    0