பிக்பாஸ் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்..! விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 67’-ல் நடிக்கிறாரா?..

Author: Vignesh
17 January 2023, 3:30 pm

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைகிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஏற்கனவே மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி கொடுத்துள்ளதால், தளபதி 67 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

thalapathy 67 - updatenews360

தளபதி 67 படத்தில் திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

thalapathy 67 - updatenews360

இந்நிலையில், தளபதி 67 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக் பாஸ் ஜனனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி.

thalapathy 67 - updatenews360

இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் படக்குழுவிடம் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

janani - updatenews360
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…