அந்த கேரக்டருக்காக என் தலை முடியை பிடுங்கி எடுத்தாங்க.. ரகசியத்தை கூறிய கமல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 3:00 pm

உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி சுமார் 60 ஆண்டுகளாக தனது வாழ்க்கையை திரைத்துறையில் ஈடுபடுத்தி வருகிறார். தற்போது, அரசியல், சினிமா, பொதுநல பணிகள் என ஈடுபட்டும் வருகிறார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் வரவேற்பை பெற்று 5 சீசன்கள் கடந்து, தற்போது 6வது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

நிகழ்ச்சி Finale நோக்கி செல்லும் நிலையில், தற்போது இதற்கு முன்னர் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனிடையே, Finale போட்டியாளர்களுக்கு சில Sacrifice Task கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸ்க்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் எலிமினேட் ஆகி தற்போது உள்ளே வந்துள்ள போட்டியாளர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.

தலைமுடி, மீசை, தாடி உள்ளிட்டவற்றை ஒழுங்கில்லாமல் ஷவரம் செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டது, விருப்பம் இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம் என சொல்லப்பட்டாலும், இதுபோன்று சுயமரியாதை குறைவான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்ததே இல்லை, கொடுக்கவும் மாட்டார் என கமல் முன்னிலையில் இந்த வார இறுதியில் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கருத்துகக்ளை கூறினர். இதுகுறித்து கமல் பேசிய போது, “நான் வேலுநாயக்கர் கேரக்டருக்காக தலைமுடியை ஷேவ் செய்தால் அப்பட்டமாக தெரியும் என உச்சி தலையில் இருக்கும் முடியை பிடுங்கி எடுத்தோம்.

மேலிருந்து ஷாட் எடுக்கும் போது, கொஞ்சம் சொட்டை போல தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி வழவழவென மாற்றினேன். உடம்பை எல்லாம் புண்ணாக்கி கொண்டேன். கோவணம் கட்டி கொண்டேன். தியாகம் என்பது விரும்பி செய்வது, அதை நான் கடமையாக நினைத்து செய்தேன். அதற்கு சம்பளமும் கிடைத்தது. மக்களிடம் பாராட்டும் கிடைத்தது. இதைத்தான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். தியாகம் என்பது விரும்பி செய்வது, வலியுறுத்தக் கூடாது, அது வன்மம். நான் உங்களை எல்லாம் வெற்றி நாயகர்களாக பார்க்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்லி உங்களை டெவலப் செய்ய விரும்புகிறேன். இல்லை நான் கோமாளியாக தான் இருப்பேன் என்றால் இருங்கள். அது உங்கள் இஷ்டம்” என்று கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…