எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!

Author: Hariharasudhan
8 January 2025, 6:14 pm

எம்ர்ஜென்சி படத்தைப் பார்க்க, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்திக்கு, நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், தான் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படத்தைக் காண வருமாறு வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதோராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நான் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அவரிடம் ‘நீங்கள் என்னுடைய படத்தைப் (எமர்ஜென்சி) பார்க்க வேண்டும்’ எனக் கூறினேன். இந்திரா காந்தியைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

நான் அவரை மிகவும் கண்ணியமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தயாரித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். நான் நேசிக்கும் தலைவர்களில் இந்திரா காந்தியும் ஒருவர்” எனக் குறிப்பிட்டு உள்ளார். கங்கனா ரனாவத், இயக்கி நடித்திருக்கும் இப்படம் ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie

மேலும் இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக, தமிழில் ஏஎல் விஜய் இயக்கத்தி கங்கனா நடித்த ‘தலைவி’ படத்திற்கு ஜி.வி இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. காவல் நிலையம் அருகே நடந்த கோரம்!

நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மேலும், கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

  • Ajith Kumar Vidaamuyarchi release date விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
  • Views: - 93

    0

    0

    Leave a Reply