ரூ. 1 கோடி தரியா? இப்போவே வரேன்…. தயாரிப்பாளரின் வாழ்க்கையே நாசமாக்கிய திரிஷா!

Author:
6 September 2024, 7:35 pm

நடிகை திரிஷா வயது 41 ஆகியும் கூட தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இது தவிர அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படியாக திரிஷா தொடர்ச்சியாக மார்க்கெட்டை பிசியாக வைத்திருக்கும் சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகை திரிஷாவால் தான் என்னுடைய வாழ்க்கையே நாசமா போச்சு எனக்கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான கிரிதர் மாமிடிபள்ளி என்பவர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருக்கிறார். அதாவது நான் திரிஷாவை வைத்து நீண்ட காலமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .

trisha - updatenews360 1

திரிஷாவிடம் சென்று கால்ஷீட்டும் கூட வாங்கி விட்டேன். ஆனால், அந்த சமயம் கதை தயாராக இல்லாததால் அப்போது திரிஷாவுடன் பாலைய்யாவுடன் லயன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் பண்ணனும் அப்படின்னு திரிஷாவிடம் சொன்னேன்.

அவங்களும் சரி அப்படின்னு ஒத்துக்கிட்டாங்க டேட் குடுத்தாங்க. கதையை சொன்னோம். அவங்களுக்கு எந்த கதை பிடிக்கல அதுக்கு அப்புறமா இயக்குனர் கோவர்த்தன ரெட்டி ஒரு ஹாரர் கதையோடு வந்தாரு. அந்த கதையை திரிஷா கிட்ட சொன்ன உடனே அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சு
கிட்டத்தட்ட அந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆனால், திடீரென அந்த திரைப்படம் நின்று போனது. அதற்கு முக்கிய காரணம் திரிஷா தான். திரிஷாவுக்கு என ஒரு சம்பளத்தை நாங்கள் முடிவு செய்து வைத்திருந்தோம். அவரும் அதற்கு ஓகே சொல்லிட்டார். ஆனால் படம் ஆரம்பிச்சு சில நாள் ஷூட்டிங் நல்லா போயிட்டு இருந்துச்சு.

trisha - updatenews360 1

அதுக்கு அப்புறமா படத்தோட வசூல் வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பிச்சுது. ஆனால், அதுக்குள்ள திரிஷா மற்றும் கோவர்த்தன ரெட்டி இவங்க ரெண்டு பேருக்கு இடையே பிரச்சனை ஆரம்பிச்சுருச்சு அவங்க ரெண்டு பேரும் படத்தின் மேல் கவனத்தை செலுத்தல இதனால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

படம் முடியபோற சமயத்துல நல்ல பிசினஸ் கூட இருந்துச்சு இது தெரிஞ்சுக்கிட்ட கோவர்தன ரெட்டி திரிஷா கிட்ட போயிட்டு படத்துக்கு ரூ.10 கோடி ரூபாய் வியாபாரம் நடந்திருக்கு. ஆனால், உங்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்து இருக்காங்க என கிளப்பி விட்டுட்டாரு.

உடனே திரிஷா ரூ.10 கோடி ரூபாய் வியாபாரம் பண்ணிட்டு ரூ. 1 கோடி ரூபாய் கொடுக்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க என்று என்கிட்ட சண்டை போட்டாங்க. அந்த சமயத்துல திரிஷாவுக்கு மார்க்கெட் கூட இல்ல. படத்துக்கும் பட்ஜெட் அதிகமாயிடுச்சு.

trisha - updatenews360 1

போட்ட காசு திரும்ப வருமா அப்படின்னு தெரியல அந்த சமயத்துல ஒரு கோடி கொடுக்க முடியாதுன்னு திரிஷாவிடம் எப்படியோ சொல்லி பார்த்தோம். ஆனால் அவங்க கேக்கல பிறகு தமிழ் சேட்டிலைட் உரிமையை உங்களுக்கே கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லியும் அவங்க கேட்கவே இல்லை.

அடிச்சு புடிச்சு ஒரு கோடி சம்பளத்தை கேட்டு வாங்கிட்டாங்க. ஆனால், படம் ரிலீஸ் ஆகி தோல்வி அடைஞ்சு போச்சு. இதனால் என்னோட வாழ்க்கையே தலைகீழா ஆயிடுச்சு. திரிஷாவை வைத்து படம் பண்ணனும் நினைச்சு என்னுடைய வாழ்க்கையே நாசமா போச்சு இதுக்கு திரிஷாவும் அந்த இயக்குனர் தான் காரணம் அப்படின்னு தயாரிப்பாளர் பரபரப்பான புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

  • Good Bad Ugly Movie Utter Waste Said Celebrity வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!