இது சர்ப்ரைஸே இல்ல.. போட்டுடைத்த சர்ச்சை நடிகர்!

Author: Hariharasudhan
14 November 2024, 11:45 am

கங்குவா படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்பது தெளிவாகி உள்ளது.

சென்னை: கிட்டத்தட்ட 3 வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம் இன்று (நவ.14) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10 மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாகி உள்ளது. இதற்காக காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றாலும், காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், தியேட்டர் வாசல்களில் சூர்யாவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்தும் நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால், சூர்யா கதாநாயகனாக நடித்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, தெலுங்கு சினிமாவிற்கு இணையான சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தில் சூர்யா ஒன் மேன் ஷோவாக படம் முழுவதும் வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, வரலாற்று கதைக்களத்தில் சூர்யாவின் நடிப்பி பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் Kanguva என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும், இப்படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்து உள்ளார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, கங்குவா மீதான ஹைப்பை மேலும் கூட்டி வருகின்றனர். ஆனால், நேற்று இரவே நடிகர் போஸ் வெங்கட் இந்த கேமியோ கதாபாத்திரம் குறித்த சர்ப்ரைஸை உடைத்து உள்ளார்.

BOSE VENKAT ANGRY

அதில், “கங்குவா, ஒரு நடிகன் வாழ்வியலில் ஒரு அதிசய நிகழ்வு உண்டாகும்.. எனக்கு. கங்குவா.. தோற்றம் கண்டதும் புரிந்திருக்கும்.. நன்றி; இயக்குனர் சிவா சார்.. ஞானவேல் சார்.. சூர்யா சார்.. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என பதிவிட்டு, முதலில் கார்த்தியை தான் டேக் செய்துள்ளார் போஸ் வெங்கட்.

இதையும் படிங்க: அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!

இதனால், இது நமத்து போனது என தியேட்டர்களிலும் அலப்பறை இல்லாமல் கார்த்தியின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த போஸ் வெங்கட் தான் என ரசிகர்கள் சிலர் எதிர் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?