புரிஞ்சுக்கோங்க சார்.. அது நீங்க இல்ல.. வைரலாகும் பார்த்திபன் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Author: Hariharasudhan17 January 2025, 12:43 pm
விடாமுயற்சி படத்தில் அஜித்தின் லுக் தொடர்பான நெட்டிசனின் பதிவிற்கு, நடிகர் பார்த்திபன் அளித்த பதில் பேசுபொருளாக மாறி உள்ளது.
சென்னை: “என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி.தரணி போற்றும் தனிப்பெரும் Style-க்குரியவர் AK. incomparable style-க்கு சொந்தக்காரர், கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட, சில இயக்குணர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக” என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு, “இது லியோ பார்த்திபன், நடிகர் பார்த்திபன் இல்லை” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், சில முக்கிய காரணங்களால் தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், விடாமுயற்சி ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, அதில், அஜித் ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைவது போலவும், அங்கு பல வில்லன்கள் அஜித்தைப் பார்ப்பது போலவும் ஒரு காட்சி காண்பிக்கப்படுகிறது. அதில், நீளமான முடி கொண்ட ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு அஜித்தை பார்ப்பது போன்ற காட்சி ஒன்று உள்ளது.
இதையும் படிங்க: பெரியாரின் ஈரோட்டில் எடுபடுமா நாதக? திமுகவே ஒப்புக்கொண்ட இருமுனைப் போட்டி.. சூடுபிடித்த தேர்தல் களம்!
இதனால், விடாமுயற்சியில் அஜித் இரட்டை வேடங்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இதில் காட்டப்படும் அஜித்தின் லுக், லியோ படத்தில் விஜயின் பார்த்திபன் கதாபாத்திரத்தைப் போன்று உள்ளதாக நெட்டிசன் ஒருவர் போட்டோ உடன் பதிவிட, அதற்கு நடிகர் பார்த்திபன் மறுபதிவு செய்திருப்பதே தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.