ஒரு சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமான புதிதிலே நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டு மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விடுகிறார்கள்.
அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் பிடித்து வைத்திருந்த இடம் இன்று வரை நீங்காமல் இருக்கும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனன்யா. கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகை அனன்யா தமிழில் சில வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
தமிழை தாண்டி இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2008 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அதை அடுத்து 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் .
இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டு கூறியதாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருது பெற்று கவுரவிக்கப்பட்டிருந்தார் .
அதை அடுத்து எங்கேயும் எப்போதும், சீடன் , உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார். இதில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் பிரபலமான தெலுங்கு நடிகரான சர்வானந்த்திற்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தது. இதை அடுத்து. திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போக சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இதையும் படியுங்கள்: விஜய் கூப்பிடலன்னாலும் ஓரமா நின்று மாநாட்டை பார்ப்பேன் – வெட்கமில்லாமல் கூறிய விஷால்!
இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் இன்னும் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கிறாரே இவருக்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கொடுத்திருந்தால் மார்க்கெட்டில் பிரபலமான நடிகையாக இருந்திருப்பார் என கருத்து கூறிய வருகிறார்கள்.