கங்கை நதி கரையில் காதலனை கரம் பிடித்த ரம்யா பாண்டியன் – குவியும் வாழ்த்துக்கள்!

Author:
8 November 2024, 5:24 pm

மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் . இவர் பிரபல வில்லன் நடிகர் ஆன அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கீர்த்தி சுரேஷின் அக்கா நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது காதலன் லவால் தவான் என்பவருடன் இன்று நவம்பர் 8ம் தேதி ரிஷிகேஷ் அருகே இருக்கும் சிவபுரி கங்கை நதிகரையில் திருமணம் நடைபெற்றது.

ramya padnian

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். முன்னதாக நடிகை ரம்யா பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியின் ஒளி பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார் .

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் போட்டியாளராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிகள் அவரை மிகப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பு மடிப்பழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலமாக ஓவர் நைட்டில் பேமஸானனார்.

ramya pandian

நடிகை ரம்யா பாண்டியனை சமூக வலைதளவாசிகள் லட்சக்கணக்கான பேர் பாலோ செய்கிறார்கள். இதனால் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் அழகழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது லவால் தவான் என்பவரை நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் யோகா பயிற்சி மாஸ்டராக இருக்கிறார். வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும் மோட்டிவேஷனராக இருந்து வரும் தவான் தான் ரம்யா பாண்டியனின் வருங்கால கணவராக அவரை கரம் பிடித்திருக்கிறார் .

உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிகவும் அழகாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ