அம்மாவுக்கு 50 வயசு ஆகிடுச்சு! ஆனாலும்… ஓடி வந்து கட்டி அணைத்த ஐஸ்வர்யா ராயின் மகள் – வீடியோ!

Author:
17 September 2024, 11:53 am

தென் இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் மிகச்சிறந்த படங்கள் மிகச்சிறந்த கலைஞர்களை கொண்டாடும் விதமாக மதிப்புமிக்க விருது விழாவாக பார்க்கப்படுவது சைமா விருது விழா. 2024ம் ஆண்டின் சைமா விருது விழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் நடைபெற்றது .

இதில் பொழுதுபோக்கு துறை சேர்ந்தவர்கள் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகத்தை சேர்ந்த திறமையானவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Aishwarya Rai Bachchan

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகச்சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. அதே சமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் சிறந்த நடிகராகவும் புகழ்பெற்றார்.

Aishwarya Rai Bachchan - Update News

மேலும் அன்னபூரணி படத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், விமர்சகர்களின் தேர்வின்படி சிறந்த நடிகையாக ஐஸ்வர்யாராய் தேர்வு செய்யப்பட்டார். இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: ***த்தா பிரியங்காவை பச்சை பச்சையா திட்டிய நிரூப் – அப்போ புரியல இப்போ புரியுது!

Aishwarya Rai

அப்போது அம்மாவுக்கு சைமா விருது கொடுத்து கௌரவிக்கும் அந்த சமயத்தில் ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா பச்சன் ஓடி வந்து அவரை கட்டி அணைத்து மிகுந்த அன்போடு பாராட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது 50 வயது எட்டியபோதிலும் தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ