தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் 53 வயதாகியும் இன்னும் தொடர்ந்து அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் நடித்து இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளிலும் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். அஜித் நடிகை ஷாலினி உடன் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அவரை காதலிக்க தொடங்கி பின்னர் 2000 ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .
இவர்களுக்கு ஆத்விக் மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். குடும்பம் குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சொல்லப்படும் தகவல் என்னவென்றால் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் வெளிநாட்டில் ஜாலியாக கைகளை கோர்த்தபடி ரொமான்டிக் வாக்கிங் சென்ற வீடியோ வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
இதைப் பார்த்து அஜித்தின் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வந்தாலும் சில அஜத்தின் தீவிரமான ரசிகர்கள் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்த பல நட்சத்திர ஜோடிகள் தற்போது விவாகரத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: மதம்… சாதி… சந்திக்காத மனிதர்களையும் வெறுக்க வைக்கும் – வைரலாகும் அஜித் வீடியோ!
எனவே நீங்கள் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டால் மற்றவர்களின் கண்பார்வையும் உங்கள்மீது பட்டுவிடும். அதனால் உங்களது வாழ்க்கையில் ஏதேனும் கசப்பான மற்றும் மோசமான சம்பவங்கள் ஏற்படும் நேரிடலாம். எனவே இது போன்று அழகான மற்றும் ரொமாண்டிக் வீடியோக்களை வெளியிடாதீர்கள் என ஷாலினிடம் கெஞ்சி கேட்டிருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ: