தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்றது. அதை அடுத்து தற்போது குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார் .
திரைப்படத்தில் நடிப்பதையும் தாண்டி அஜித்திற்கு கார் ரேஸ் , பைக் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கிறது. இப்போதும் கூட அவர் வெளிநாடுகளில் அதிவேகமாக கார் ஓட்டுவது பைக்கில் செல்வது என தன்னுடைய ஆர்வத்தை காட்டிய வண்ணம் இருக்கிறார் .
இதையும் படியுங்கள்:திரிஷாவின் பிரம்மாண்ட வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர்!
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் அஜித் புதியதாக வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருடன் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரின் மனைவியான நடிகை ஷாலினி தனது instagram-ல் பகிர்ந்து இருக்கிறார். இந்த காரின் விலை ரூபாய் 2 முதல் 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.